Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கியாஸ் ஷாபி)
சின்னக் கிண்ணியாவையும் பெரிய கிண்ணியாவையும் இணைக்கும் கட்டையாறுப் பாலம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அவற்றை உடனடியாக புனர்நிர்மாணம் செய்து தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கடந்த 2005ஆம் ஆண்டு ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இப்பாலத்தின் ஊடாக நாளாந்தம் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்கின்றன. அத்தோடு பெருமளவான பாதசாரிகளும் தங்கள் போக்குவரத்துக்காக இப்பாலத்தையே பயன்படுத்துகின்றனர்.
இப்பாலம் கிண்ணியா பிரதான வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் றஹ்மானியா நகர், கட்டையாறு, பெரியாற்றுமுனை, குறிஞ்சாக்கேணி ஆகிய பிரதேச மக்களின் போக்குவரத்தை இலகு படுத்துவதற்காகவும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.
ஆனால் நிர்மாணிக்கப்பட்டு ஆறு வருடங்களுக்குள்ளேயே இந்த நிலையை அடைந்திருப்பதையிட்டு பொது மக்கள் அதிருப்தி அடைகின்றனர். எதிர்வரும் பருவ மழை காலத்தில் இப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு முன்னர் இதனை புனர்நிர்மாணம் செய்து தருமாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சிடம் மக்கள் வேண்டுகின்றனர்.
anban Saturday, 27 August 2011 09:34 PM
நிர்மாண வேலை செய்த கொந்தரது காரருக்கு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago