2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

உவர்மலை விவேகானந்தா கல்லூரி அதிபரை கௌரவிக்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)
திருகோணமலை, உவர்மலை விவேகானந்தா கல்லூரி அதிபர் ஆ.செல்வநாயகத்திற்கு சிறந்த அதிபருக்கான விருது அண்மையில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

இவரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை  காலை விவேகாநந்தா கல்லூரியில் நடைபெற்றது.

பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பனவற்றுடன் இணைந்து ஆசிரியர்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது, முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சேனையூர் மத்திய கல்லூரி முன்னாள் அதிபருமான க.துரைரெட்ணசிங்கம்  அதிபர் ஆ.செல்வநாயகத்தை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

திருகோணமலை கோட்டக்கல்வி அதிகாரி க.அரியநாயகம், முன்னாள் ஆசிரயிர் ஆ.நவரெத்தினம், திருகோணமலை நகர சபை உறுப்பினர் கோ..சத்தியசீலராஜா ஆகியுhரும் இந் நிகழ்வல் கலந்து சிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X