2025 மே 07, புதன்கிழமை

திருமலையில் கடும் மழை

Kogilavani   / 2011 டிசெம்பர் 19 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன், எம்.பரீட்)

திருகோணமலையில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

திருகோணமலை புல்மோட்டை வீதியில் மூன்றாவது மைல் கல் பிரதேசத்தில் வீதியில் 2 அடிக்கு மேலாக  வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன் வெருகல் பிரதேசத்தில் ஏ15  வீதியின் பல இடங்களிலும் வெள்ளம் நீர் பாய்ந்தோடுகிறது.

இதேவேளை,  இம்மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழைக் காரணமாக  க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றியுள்ள  மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு செல்வதிலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அத்துடன் இப்பிரதேச மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாமெனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்ததுள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • sivanathan Monday, 19 December 2011 10:55 PM

    இது ஜமாலியா பாடசாலைக்கு பக்கத்தால் செல்லும் விதி அல்லவா. எங்களுக்கு மூன்றாம்கட்டை பிரதான வீதி காட்டுகிறீர்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X