Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 20 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன், எம்.பரீட்)
கிழக்கு மாகாண ஆசிரியர்கள் தமக்கு வழங்கப்பட வேண்டிய இடமாற்றம் வழங்கப்படாமையயை கண்டித்து கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஈடுபட்டார்கள்.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் இவர்களது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2 வருடங்களக்கு முன்னர் தாம் கட்மையாற்றிய பாடசாலைகளில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டடோம். அதன்போது 2 வருடத்தின் பின்னர் மீண்டும் இடமாற்றம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இன்றுவரை இடமாற்றங்கள் எமக்கு வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினார்கள். இதன் பின்னர் ஆசிரியர்களின் பிரதிநிதிகள், மாகாண கல்வி பணிப்பாளர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலதீர திஸாநாயக்க ஆகியோரைச் சந்தித்த மஜர்களையும் கையளித்தனர்.
இதன் பின்னர் கிழக்கு மாகாண சபைக்குச் சென்று முதலமைச்சரையும் வீதி நிர்மாணம், நீர்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையையும் சந்தித்து மகஜர்களை கையளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
29 minute ago
34 minute ago