2025 மே 07, புதன்கிழமை

வைத்தியரை கடத்தி கப்பம் பெற்ற ஐவர் கைது

Super User   / 2011 டிசெம்பர் 20 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை, வெள்ளை மணல் பகுதியிலுள்ள வைத்தியரை கடத்தி கப்பம் பெற்ற ஐந்து பேரை இன்று செவ்வாய்க்கிழமை குச்சவெளி பொலிஸார் ஹொரவப்பொத்தானை  பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கடந்தடிசம்பர் 2ஆம் திகதி குறித்த குழுவினர் நிலாவெளி பகுதியில் இவ்வைத்தியரைக் கடத்தி 10 இலட்சம் ரூபா பணம் கோரி அத்தொகையை நோட் மூலம் எழுதிக் கொண்டு விடுதலை செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முறைப்பாடு தொடர்பாக  குச்சவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி குணத்திலகவின் உத்தரவுக்கமைய பொலிஸ் இன்ஸ்பெக்டர் எம்.தமீம்இ பெரும் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஐ.ஜீ.குணசேகர மேற்கொண்ட நடவடிக்கையின் பொருட்டு இவர்கள் ஐவரும் இன்று ஹொரவப் பொத்தானையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து துப்பாக்கியொன்று முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் பைசிக்கள் ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணையை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X