Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 27 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்)
இலங்கை ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் (இலங்கை ஒபர் நிறுவனம்) அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரைணயுடன் இந்தியாவில் இருந்து திரும்பியவர்களுக்கு குடியுரிமை சான்றிதழ் பெற்றுக் கொடுக்கும் நடமாடும் சேவை ஒன்றினை நடத்தினார்கள்.
திருகோணமலை இராம கிருஷ்ண சங்கம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி சம்பந்தர் மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் இச்சேவை நடத்தப்பட்டது.
1983ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருந்தவர்களின் பிள்ளைகளுக்கு பிரஜா உரிமை பெற்றுக் கொடுப்பது இந்நடமாடும சேவையின் நோக்கமாகும். இதுபோன்று ஒரு நடமாடும் சேவை கடந்த காலத்தில் மன்னார் வவுனியா, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நடத்தப்பட்டது.
நாளையும் இச்சேவை நடத்தப்பட உள்ளது. 125பேர் வரை குடியுரிமை பெறுவதற்றாக இதுவரை விண்ணப்பங்களை சமர்ப்பதித்து உள்ளனர். திருகோணமலை பட்டணமும் சூழலும், குச்சவெளி பிரதேச செயலாளர் பரிவுகளில் வசித்தவர்கள் இதில் பங்கு கொண்டிருந்தார்கள்.
இலங்கை குடிவரவு திணைக்கள உதவி ஆணையாளர் ஜி.என்.அத்தல கமஹே தலைமையில் 5 அதிகாரிகள் இச்சேவையில் கலந்து விண்ணப்பங்ளை பரிசீலனை செய்து சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
திருகோணமலை அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா பிரதம அதிதியாகக கலந்து கொண்டு நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்தார். இலங்கை ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் ஸ்தாபகரும் தலைவருமான சட்டத்தரணி செ.சந்திரஹாசனின் வழிநடத்திலில் இச்சேவை இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
31 minute ago
44 minute ago