2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மொழி பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சிக் கடிதம்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 28 , மு.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

மொழி பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சிக் கடிதம் வழங்கும் நிகழ்வு கிண்ணியா தி/கிண்ணியா அல்-ஹிறா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மொழி பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சிச் சான்றிதழ்களும் முன்பள்ளி மாணவர்கள் மற்றும்  ஆசிரியர்களுக்கு  கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினகள் தொடர்பில் ஆராயப்பட்டு அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கவும்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் மூதூர் தொகுதி அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட செயலாளருமான கே.ஜே.கே.ஜெகுபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் ஜீ.வி.டீ.திலகஸ்ரீ, இலங்கை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவி இந்திராணி குணவர்த்தன, உறுப்பினர்கள், முன்பள்ளி ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X