Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 22 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கியாஸ் ஷாபி)
'முஸ்லிம் கிராமங்கள் தோறும் அஹதிய்யா பாடசாலைகளை ஆரம்பிப்போம்' என்னும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா இஹ்ஸானியா மகளிர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடல் அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது அலியின் தலைமையில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் அஹதிய்யா பாடசாலைகளின் தற்போதைய நிலைவரம் பற்றியும் அதன் எதிர்கால வளர்ச்சிக்காக எவ்வாறான நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதென்பது தொடர்பிலும் ஆராயப்பட்டன.
திருகோணமலை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் செயலாளர் மௌலவி எம்.வை.ஹதியத்துள்ளாவின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் மௌலவி நூறுல் அமீன், களுத்துறை மாவட்ட அஹதிய்யா சம்மேளனத்தின் தலைவர் எம்.எச்.எம்.முகையின், கொழும்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளனத் தலைவர் எம்.சறூக், அஹதிய்யா பாடசாலைகளின் பரீட்சை ஆணையாளர் ஏ.எஸ்.ஜெயினுலாப்தீன், அஹதிய்யா பாடத்திட்டக் குழுவின் உறுப்பினர் எச்.எம்.லாபீ, திருகோணமலை மாவட்ட ஜெம்மியத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி ஏ.ஆர்.நஸார், அஹதிய்யா தேசிய மத்திய சபையின் பொருளாளர் எம்.எஸ்.பதூர்தீன், அஹதிய்யா பாடசாலைகளின் தேசிய அமைப்பாளர் எ.எல்.எம்.அஸ்வர், கிண்ணியா நகர சபைத் தலைவர் எம்.எம்.ஹில்மி, திருகோணமலை மாவட்ட அஹதிய்யா பாடசலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், சம்மேளன உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
38 minute ago
45 minute ago