2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு கண் வில்லைகள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 15 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரமன்)

திருகோணமலை பொதுவைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவிற்கு 350,000 ரூபா பெறுமதியான 73 கண் வில்லைகளை அல் முஸ்லிம்மாத் தொண்டர் நிறுவனம் இன்று புதன்கிழமை வழங்கிவைத்தது.

கண் சிகிச்சைப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் மற்றும் மருத்துவ அத்தியட்சகரிடம் இந்த வில்லைகள் வழங்கிவைக்கப்பட்டன.
கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட அல் முஸ்லிம்மாத் நிறுவனம் பின்தங்கிய பிரதேச வைத்தியசாலைகளுக்கு கண் வில்லைகளை இலவசமாக வழங்கிவருகின்றன. திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், மூதூர் வைத்தியசாலைகளுக்கு முறையே 50 மற்றும் 60 கண் வில்லைகளை இந்நிறுவனம் வழங்கிவைத்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .