Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 26 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
திருகோணமலை, நிலாவெளி கடலில் மூழ்கி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவரது சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அல்பேட் ஜேரோம் சோச்பியர் என்ற 41 வயதுடைய நபரே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த மேற்படி நபர் தனது மனைவியுடன் நிலாவெளி கடற்பரப்பில் குளிப்பதற்காக நேற்று சனிக்கிழமை சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி நபரின் சடலம் திருகோணமலை போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
32 minute ago
39 minute ago