Kogilavani / 2012 மார்ச் 01 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.பரீட்)
மூதூர் கல்வி வலயத்தில் உள்ள அதிகஷ்ட பிரதேச பாடசாலை மாணவர்களின் வாசிப்பு திறனையும், ஆக்கத்திறனையும் அதிகரிக்கும் நோக்கில் மூதூர் / மேன்காமம் வித்தியாலயத்தில் புத்தக கண்காட்சியும், சிறுவர் சந்தையும் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் ஏ.கதிர்காமநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூதூர் கல்வி வலைய கல்விப் பணிப்பாளர் ஏ.வித்தியானந்தமூர்த்தி பிரதம அதிதியாக கலந்து கொண்டு இக்கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
பாடசாலை நூலகக் குழுவுடன் இணைந்து கிண்ணியா விசன் நிறுவனத்தினால் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மூதூர் நூலக இணைப்பாளர் எம்.எஸ்.ஆரீப், திருகோணமலை மாவட்ட வாசிப்பறை நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எஸ்.இராஜந்திரன், கிண்ணியா விசன் வாசிப்பறை இணைப்பாளர் டீ.சவாஹிர் மற்றும் அணிதிரட்டுனர் எஸ்.ஜ.பாரீஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026