2025 மே 10, சனிக்கிழமை

அமெரிக்க பிரதிநிதிகள் கிழக்கு முதலமைச்சர், மாகாண அமைச்சருடன் சந்திப்பு

Super User   / 2012 டிசெம்பர் 04 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட், எம்.பரீத்)


சட்டவாக்கத்துறை மற்றும் நல்லாட்சி மேம்பாடு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் - ஐக்கிய அமெரிக்காவின் திரு ஜேம்ஸ் பப்பாச்சின் தலைமையிலான ஐந்து பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவினர் திருமலை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த தூதுக்குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் மற்றும் மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் ஆகியோரை நேற்று திங்கட்கிழமை தனித்தனியாக கலந்துரையாடினர். இதன்போது கிழக்கு அபிருத்தி தொடர்பில் மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்துடன் பேச்சு நடத்தினார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்திலுள்ள வறுமை, வேலை வாய்ப்பின்மை போன்ற சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வகையில், அந்நிய முதலீடுகளினூடாக தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் இந்த தூதுக்குழுவினரிடம் வலியுறுத்தினார்.

யுத்ததிற்கு பின்னரான நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் பெறுபேறுகள் சாதாரண பொது மக்களை சென்றடையவில்லை எனவும் இதன்போது அவர் சுட்டிக் காட்டினார்.

வேல்ட் லேனிங் நிறுவனத்தின் அனுசரணையுடன் திருகோணமலை மாவட்டத்துக்கு வருகை தந்த இக்குழுவினரின் சந்திப்புக்களில் பிரஜைகள் முன்னணியின் பொது செயலாளரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே. ஸ்ரீரங்காவும் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X