2025 மே 10, சனிக்கிழமை

திருமலையில் பாதிக்கப்பட்ட மக்களை கிழக்கு முதலமைச்சரும் எதிர்கட்சி தலைவரும் பார்வை

Kogilavani   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத், கஜன்)

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது முதலமைச்சர், மூதூர் சாபி நகர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடனும் கிளிவெட்டி தற்காலிக அகதி முகாமில் உள்ள மக்களுடனும் கலந்துரையாடி குறைநிறைகளை கேட்டறிந்துகொண்டார்.

மேலும் வெருகல் பிரதேசத்தில் பாதிக்கப்பட்டு மாவடிச்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தங்கியிருக்கும் மக்களின் குறைநிறைகளையும் அவர்  கேட்டறிந்து கொண்டார்.

இதேவேளை, கிழக்கு மாகாண சபை எதர்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டார்.

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆலங்கேணி, ஈச்சந்தீவு, கிராமங்களுக்கு விஜயம் செய்து அவர் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டதுடன் அம்மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்திருந்தவர்களையும் அவர் சந்தித்து உரையாடினார்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X