2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

திருகோணமலைக்கு பொலிஸ்மா அதிபர் விஜயம்

A.P.Mathan   / 2013 ஜனவரி 05 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)

திருகோணமலைக்கான வியஜம் ஒன்றினை பொலிஸ் மா அதிபர் என்.இலங்ககோன் இன்று சனிக்கிழமை மேற்கொண்டிருந்தார்.

இவ்விஜயத்தின்போது இவ்வருடத்துக்கான சுதந்திர தின கொண்டாட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். மதியம் திருகோணேஸ்வரம் ஆலயம் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் பிரட்றிக் கோட்டையில் உள்ள பொலிஸாரின் சுற்றுலா விடுதி நிர்மாணப் பணிகளையும் பார்வையிட்டார்.

பொலிஸ் மா அதிபரின் திருகோணமலை வருகையினை முன்னிட்டு போக்குவரத்து பொலிஸார் விசேட கடமைகளில் பிரதான சந்திகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .