2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கிண்ணியா நகர சபை, பிரதேச சபை எல்லை மீள்நிர்ணயம் குறித்து மகஜர் கையளிப்பு

Super User   / 2013 பெப்ரவரி 27 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.குருநாதன், எம்.பரீத்

"கிண்ணியா நகரசபைக்கும் கிண்ணியா பிரதேச சபைக்கும் தலா 13 உறுப்பினர்கள் தெரிவாகும் வகையில் இவ்விரு உள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்பட வேண்டும்" என்று கிண்ணியா கிழக்கு வள மனிதவள அபிவிருத்தி நிலையம் உள்ளூராட்சி மன்றங்களின் வட்டாரங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள மகஜரில் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ள மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"புதிய கணக்கெடுப்பின்படி கிண்ணியா நகரசபைப் பகுதியில் 21,554 வாக்காளர்கள் உள்ளனர். எனவே இங்கு 9 வட்டாரங்கள் உருவாக்கப்பட வேண்டும். வட்டார ரீதியில் 9 உறுப்பினர்களும் விகிதாசார ரீதியில் 4 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட வேண்டும்.

கிண்ணியா பிரதேசப் பகுதியில் 16506 வாக்காளர்கள் உள்ளனர். இங்கும் 9 உறுப்பினர்களை தெரிவு செய்யக்கூடியதாக ஒன்பது வட்டாரங்கள் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் விகிதாசார அடிப்படையில் 4 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்" என்று அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X