2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சிவில் பாதுகாப்பு குழுவின் நடமாடும் சேவை.

Super User   / 2014 மார்ச் 22 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்.

 
திருகோணமலை அன்புவழிபுரம் கிராம சேவகர் பிரிவில் இன்று (22) நடமாடும் சேவை ஒன்று இடம் பெற்றது.

அன்புவழிபுரம், செல்வநாயகபுரம், அபயபுரம் ஆகிய கிராமங்களில் இயங்கி வரும் சிவில் பாதுகாப்பு குழுவினர் மற்றும் உப்புவெளி பொலிஸ் நிலையமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வினை திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
 
இந் நடமாடும் சேவையின் போது பொலிஸார் மக்களுக்கு இலவச ஆயுர்வேத மருத்துவ சேவை மற்றும் கண் பரிசேதனை சேவை மற்றும் வறிய மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகள் போன்ற சேவைகளும் இடம் பெற்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X