2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

திருமலையில் மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன்  கியாஸ்

திருகோணமலை கப்பல்துறை பிரதேசத்தில் தேசிய கல்வியற் கல்லூரி ஒன்றை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே திங்கட்கிழமை(25) தெரிவித்தார்.

இக் கல்விக் கல்லூரிக்காக குறித்த பிரதேசத்தில் 300 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரிக்கு அருகில் சகல வசதிகளுடனும் கூடிய மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலம் அமைக்கப்படவுள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேசசபை பிரிவிட்குட்பட்ட குறிஞ்சாக்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் சுற்றுமதில்;; மற்றும் குறிஞ்சாக்கேணி மகளீர் மகா வித்தியாலயத்தில் சிறுவர் விளையாட்டு முற்றம் என்பவற்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (25) நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் மூலம் இந்த மாவட்டத்தைச் சோந்த ஐந்தாம் தரதில் சித்தியடைந்த மாணவர்கள் சகல வசதிகளுடனும் கற்கக் கூடிய நிலை ஏற்படும்.

கல்வி நிர்வாகத்தில் அரசியல் கலக்கின்றபோது அங்கு வினைத்திறன்மிக்க கல்விச் சமூகம் ஒன்றை உருவாக்க முடியாது. இதனாலேயே நான் கல்வியை வேறாகவும் அரசியலை வேறாகவும் பார்க்கிறேன். எந்த சந்தர்ப்பத்திலும் கல்வியில் அரசியல் தலையிடுவதை நான் விரும்புவதில்லை' என்று தெரித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X