Thipaan / 2015 ஜூலை 18 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
மொனராகலையிலிருந்து கந்தளாய்க்கு சென்ற பிரயாணிகள் பஸ் ஒன்றில் மூன்று கிலோ கிராம் கஞ்சாவை கொண்டு சென்ற ஒருவரை இன்று சனிக்கிழமை (18) அதிகாலை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த பஸ்ஸை நிறுத்தி சோதனையிட்ட பொலிஸார், குறித்த சந்தேக நபரை கைது செய்ததுடன் மூன்று கிலோ கஞ்சாவை மீட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
சந்தேக நபரை தடுத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
17 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago