Princiya Dixci / 2015 ஜூலை 20 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கந்தளாய், 91ஆம் கட்டைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) இரவு முச்சக்கரவண்டியும் லொறியும் விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
49 வயதுடைய சுகத்சம்பத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற லொறியுடன் திருகோணமலையிலிருந்து தம்புள்ளைக்குச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் சடலம், கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள கந்தளாய் பொலிஸார், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
17 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago