2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

காவலாளியை தாக்கிய யானை

Suganthini Ratnam   / 2015 ஜூலை 23 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                        

திருகோணமலை, கந்தளாயிலுள்ள வயல்வெளியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த ஒருவர்  நேற்று வியாழக்கிழமை (23) அதிகாலை யானையின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாயைச் சேர்ந்த முகம்மட் இஸ்மாயில் (வயது 54) என்பவரே யானையின் தாக்குதலுக்குள்ளானார்.

இந்த வயல்வெளியில் காவல் கடமையில் ஈடுபடுவதற்காக புதன்கிழமை (22) இரவு சென்ற தான், அங்கு அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் சற்று கண் அயர்ந்ததாகவும் இவ்வேளையில் யானையொன்று வந்து தன்னை  தாக்கியதுடன், வேளாண்மையையும் சேதப்படுத்தியுள்ளதாக தாக்குதலுக்குள்ளான காவலாளி தெரிவித்தார்.  

இந்தச் சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .