Suganthini Ratnam / 2015 ஜூலை 26 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல்
என்.வி.கியூ தராதரமுள்ள பயிற்சி பெற்ற குழாய் பொருத்துநர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணி முதல் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய சேவை நிலையம் (கிழக்கு) திருகோணமலை அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய சேவை நிலையத்தினால் (கிழக்கு) நடத்தப்பட்ட தெரிவு செய்யப்பட்ட என்.வி.கியு தராதரமுள்ள குழாய் பொருத்துநர்களுக்கான (திருகோணமலை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த) பயிற்சிநெறியில் கலந்துகொண்டவர்களுக்கு மாத்திரமே இந்த நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் சமூகவியலாளர். எம்.எஸ்.எம்.சறூக் தெரிவித்துள்ளார்.
18 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago