Suganthini Ratnam / 2015 ஜூலை 27 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றுள்ள இருவேறு விபத்துக்களில் ஒருவர் மரணமடைந்ததுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை - புத்தளம் பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து கட்டடத்துடன் மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற புதுக்குடியிருப்பு, வரோதயநகர் பகுதியைச் சேர்ந்த கே.கோபிநாதன் (வயது 29) சம்பவ இடத்தில் மரணமடைந்தார்.
இவ்வாறிருக்க, புல்மோட்டை பிரதான வீதியில் ஏழாம் கட்டைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் கப் ரக வாகனம் மோதியதினால், மூன்று பேர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு அருகில் நின்ற தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோரே காயமடைந்துள்ளனர்.
பிரான்ஸ் பிரஜைகளாகன கணவன், மனைவி ஆகியோரே கப் ரக வாகனத்தில் பயணித்ததாகவும் இந்த வாகனத்தை செலுத்திச் சென்றவருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமையால் அவரை கைதுசெய்து பொலிஸ் பிணையில் விடுத்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
18 minute ago
1 hours ago
sivanathan Monday, 27 July 2015 11:12 AM
விபத்துக்கு காரணமான வானம் பிக் ரகத்தைச் சேர்ந்தது. 32-1025 இலக்க முடையது. இதனைச் செலுத்தி வந்தவர்கள் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்கள். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை 2.40 மணிக்கு இடம்பெற்றது. பொலீசார் .3.30 மணிக்கு பின்னரே ரஷய நாட்டைச் சேர்ந்த சாரதியை கைது செய்திருந்தனர். நிலாவெளி பொலிசார் விசாரணைகளை செய்கின்றனர். விபத்து நடந்த இடம் நிலாவெளி 7வது மைல் கல் . காயமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் திருகோணமலை மூர் வீதியைச் சேர்ந்தவர்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago