Suganthini Ratnam / 2015 ஜூலை 29 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்,எஸ்.சசிக்குமார்
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் வருடாந்த அமுலாக்கல் செயற்றிட்டத்தின் மூலம் 49 அமைப்புக்களுக்கு 58 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய நிதிக்கான ஒதுக்கீட்டு கடிதங்கள் வழங்கும் நிகழ்;வு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
பாடசாலைகள், நூலகங்கள், அறநெறிப் பாடசாலைகள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், கோவில்கள் போன்ற அரச அங்கிகாரம் பெற்ற அமைப்புக்களின் ஊடாக இந்த நிதி அபிவிருத்திப் பணிகளுக்காக பகிர்ந்தளிக்கபட்டது.
கடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவ்வாறான சிறிய கட்டுமானம் மற்றும் பாடசாலைகளுக்கான உபகரணங்கள் சிலவற்றை பெற்றுக்கொள்ளக்கூடியமைக்கு இந்த நிதி சிறு உதவியாக இருக்கும் என்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
17 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago