Kanagaraj / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை -பாலையூற்று பகுதியில் 15 வயது சிறுமியொருவர் ஒருவகையான விதை உட்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அழிக்கப்பட்டும் சிகிச்சை பயனளிக்காமல் இன்று செவ்வாய்க்கிழமை(04) மாலை மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி பாலையூற்று -அந்தோனியார் வீதியில் வசித்து வந்த என்.நிமேதா (15 வயது ) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியின் தாய் சிறுவயதிலேயே உயிரிழந்துள்ளதாகவும் தந்தை கூலி தொழிலாளி எனவும் இச்சிறுமி திருமணம் முடித்த நபருடன் காதல் தொடர்பு வைத்திருந்தமையினால் உறவினர்களுக்கு தெரியவந்து பின்னர் சிறுமியை விசாரித்தமையினால் ஆத்திரம் கொண்டு ஒருவகையான விதையை உட்கொண்டதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
சிறுமியின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது .சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
விசாரணைகளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
18 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago