Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 13 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
நாட்டு மக்கள் வெற்றிலைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பொதுபல சேனாவின் நாகப்பாம்பு சின்னத்தை வளர்ப்பதற்கு சமமானதாகும். பின்பு அவர்களின் ஆதிக்கம் மேலோங்கும் என திருகோணமலை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் வேட்பாளர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
கந்தளாய், பேராறு பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (12) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்துள்ளனர். சிறுபான்மை மக்கள் இன்னமும் சில உரிமைகளும் சலுகைகளும் கிடைக்காமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆகையால் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து நமது முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பள்ளிவாசல்களை உடைப்பதற்காகவே இத்தேர்தலில் போட்டியிடுகின்றார். இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் அனைத்து அபிலாஷைகளையும் பெறவேண்டுமாக இருந்தால் அனைத்து மக்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்றார்.
17 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago