Niroshini / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
புதிய சட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் அமுல்படுத்தாத வரையில் இந்த நாடு சிறுவர்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு என்பது நிலையாகி விடும் என திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாஜம் தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டு முதல் ஐந்து மாதத்தில் மாத்திரம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 3,219 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் அவ்வமைப்பு இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
கொட்டதெனியாவ, சிறுமி செயா சந்தவமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது கண்டனத்துக்குரியது.
சிறுவர்களுக்கு பாதுகாப்பில்லாத ஒரு நாடாக இலங்கை உருவாகி வருவதை கடந்த கால சம்பவங்களின் ஊடாக உணரமுடிகின்றது.
எமது நாட்டில் குற்றவியல் சட்டங்களை கடுமையாக்குவதன் மூலம் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை கட்டுப்படுத்த முடியும். இதற்கு பல அரபு நாடுகள் எடுத்துக்காட்டாகவுள்ளன.
இலங்கையில், அதிகமான சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ள போதிலும்,அவற்றுக்கான தீர்வுகளும் முறைப்பாடுகளும் மிகக்குறைவாகவே காணப்படுகின்றன.
அதற்கான நடவடிக்கைகளும் மிகவும் மந்த கதியில் முன்னெடுக்கப்படுவதனால் பொதுமக்கள் மத்தியில் சட்டத்தின் மீதும், பொலிஸார் மீதும் நம்பிக்கை இழக்கச்செய்கின்றது.
2015ஆம் ஆண்டு முதல் ஐந்து மாதத்தில் மாத்திரம் 3219 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2014ஆம் ஆண்டு முழுவதும் இடம்பெற்ற 10,315 எண்ணிக்கையை விட அதிகமானதாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 hours ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
17 Dec 2025
17 Dec 2025