Princiya Dixci / 2021 மே 30 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா மூன்றாவது அலை காரணமாக 1,199 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 08 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளைத் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பதற்கான சிபாரிசு தேசிய கோவிட் செயலணிக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (29) நடைபெற்ற கொரோனா தடுப்புச் செயலணியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, மாவட்டச் செயலாளர் இதனைத் தெரிவித்தார்.
சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்கள், பயணக் கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடிப்பதன் மூலமே இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்தமுடியும் எனவும் இதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவும் அவர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு 10,000 ரூபாய் மற்றும் 5,000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
5 hours ago
7 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
16 Nov 2025