2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

30 வருடங்களின் பின் மீண்டும் கோயிலடி வாராந்தச் சந்தை

Kogilavani   / 2011 ஜூன் 09 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
தம்பலகாமம் பிரதேச சபையின் கீழ் இயங்கி வந்த கோயிலடி வாராந்த பொதுச் சந்தை  மீண்டும் புனரமைக்கப்பட்டு நாளை மறு தினம் சனிக்கிழமை காலை தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம். எஸ்.எம்.சுபியானினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

தம்பலகாமம் கோவிலடியில் இயங்கிவந்த  இப்பொதுச் சந்தையை கடந்த 30 வருட காலமாக நாட்டிலிருந்த யுத்த சூழ்நிலையினால் கைவிடப்பட்டிருந்தது.

இதனால் கோயிலடி நாயன்மார்த்திடல், சிப்பித்திடல், கல்லிமடு, பத்தினி புரம் பொற்கேணி ஆகிய கிராம மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

இதனைத் தவிர்க்கும் முகமாக தவிசாளர் எஸ்.எம்.எஸ்.எம்.சுபியாம் தம்பலகாமம் பிரதேச சபையின் நிர்வாகத்தை பொறுப்பேற்று 2 மாதகாலத்திற்குள் இச்சந்தையை திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .