2025 மே 03, சனிக்கிழமை

6 எஸ் செயற்றிட்டம் தொடர்பாக அறிவுறுத்தும் கருத்தரங்கு

Kogilavani   / 2012 மார்ச் 13 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரமன்


 'முன்னோடியான சமூகத்தை நோக்கி' என்ற கல்வியமைச்சின் செயற்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான 6 எஸ் செயற்திட்டம் தொடர்பான அறிவூட்டும் கருத்தரங்கு இன்று திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் ஆரம்பமானது.

'6எஸ் பாடசாலைகளுக்கான திட்ட அறிமுகம்' என்ற தலைப்பில் மத்திய கல்வியமைச்சின் 'ஜெய்கா' செயற்திட்ட விசேட ஆலோசகரும், குழந்தை மனநல நிபுணருமான லால் பொன்சேகா விசேட விளக்க உரையினை வழங்கினார்.

இச் செயலமர்வில், திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

டீ.எப்.சி.சி வர்தன வங்கியின் பிரதான அனுசரணையில் இச் செயற்றிட்டம் திருகோணமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இவ் விசேட செயற்றிட்டத்தில் மேலும் 5 தமிழ் மொழிமூல  பாடசாலைகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கம் முதல் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த யப்பானிய 'ஜெய்கா' 5எஸ் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு சில மாற்றங்களுடன்; தற்போதைய 6எஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளின் பௌதீக வளங்களை உச்ச பயன்பாட்டிற்கு உட்படுத்தி சிறப்பானதும், முழுமையானதுமான கல்வி வெளியீடுகளை பாடசாலை மாணவர்கள் மத்தியில் உருவாக்குவதுடன் கற்றலுக்கு ஏற்ற பாடசாலை கல்வி நிலையை உருவாக்குவது இத்திட்டதின் நோக்காமாகும்.


You May Also Like

  Comments - 0

  • ihjas afm Wednesday, 14 March 2012 03:22 AM

    ஆறு எஸ் செயல்திட்டமா? ஐந்து எஸ் திட்டமா ?

    Reply : 0       0

    sivanathan Monday, 19 March 2012 04:11 AM

    விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்திலும் இவ்வாறு ஒரு வேலைத்திட்டம் நடைபெற்றது. ஏனையா எமது பாடசாலை மீது ஓரவஞ்சனை?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X