Editorial / 2022 மே 24 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

கீத்
கடல் வழியாக சட்டவிரோதமான முறையில், அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முற்பட்ட வேளையில் திருகோணமலை சல்லி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள 67 பேரும், மேலதிக விசாரணைகளின் பின்னர், திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நாளை (25) ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என துறை முகப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சாம்பல்தீவு, சல்லி கடற்கரை பகுதியில் வைத்து 12 பேரும், சல்லி கடல் பிரதேசத்தில் படகில் சென்றுக்கொண்டிருந்த 55 பேருமென மொத்தமாக 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சிறுவர்கள் மூவர் உட்பட ஆண்கள் 45, ஏழு பெண்களும் அடங்குவர். அவர்கள் அனைவரு் 3 வயதுக்கும் 53 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.
திருகோணமலை சல்லி சாம்பல் தீவு கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்ட 12 பேரும் நிலாவெளி பொலிஸிலும், சல்லி கடற்பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட 55 பேரும் திருகோணமலை துறை முகப் பொலிஸிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என அறியமுடிகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் துறைமுகப் பொலிஸார், அவர்கள் அனைவரும், திருகோணமலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, புத்தளம், இரத்தினபுரி, கம்பஹா அம்பாறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்வர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது என்றனர்.
9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025