Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 மே 24 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, சாம்பல்தீவு சல்லி பிரதேசத்திலிருந்து வெளிநாடொன்றுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 67 பேர் நேற்றிரவு (23) கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எந்த நாட்டுக்கு இவர்கள் செல்ல முயற்சித்தனர் என்று தகவல்கள் வெளியாகவில்லை, கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்கள், 3 சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளனர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்கள், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தின்போது குறித்த பயணத்துக்காக பயன்படுத்தப்பட்ட 3 ஓட்டோ, ஒரு கெப் வாகனம், வானொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொருளாதார சுமை காரணமாக ஏற்கெனவே, இலங்கையின் வடக்கில் இருந்து பலர் இந்தியாவுக்கு கடல் வழியாக சட்டவிரோமாக சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
8 hours ago
17 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Oct 2025