2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

9 கிறனைட் லோஜ்ருக்கான சன்னங்கள் மீட்பு

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத், எப்.முபாரக்

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ காட்டுப்பிரதேசத்தில், கிறனைட் லோஞ்சரில் பாவிக்கும் 9 சன்னங்ககள், நேற்று (20) மாலை மீட்கப்பட்டதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பலகாமம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலை அடுத்து மேற்படி சன்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

யுத்த காலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்காக சன்னங்களை மறைத்து வைத்திருக்கக்கூடும் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சன்னங்களை, கந்தளாய் நீதிமன்ற அனுமதியுடன், விசேட அதிரடிப்படையின் உதவியுடன் அழிப்பதற்கான நடவடிக்கையில் தம்பலகாமம் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X