2021 மே 08, சனிக்கிழமை

அதிபர் விளக்கமறியலில்..

Editorial   / 2017 நவம்பர் 03 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை ஊறுபொக்க பகுதியில் மாணவர் ஒருவரை தாக்கிய பாடசாலை அதிபர் எதிர்வரும் (​7) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாணவனின் தந்தை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய, அதிபர் கைது செய்யப்பட்டு,​மொரவெவ ​மேலதிக நீதவான், சீ.எஸ். திஸாநாயக்க முன்னிலையில் நேற்று (02) ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

தலைமுடியை வெட்டவில்லை என்ற காரணத்திற்காக தரம் 11 இல் கல்விப் பயிலும் மாணவனை அதிபர் நேற்று (02) காலைக் கூட்டத்தின் போது கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான மாணவனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர் ஊறுபொக்க  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X