2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

அவசரமாக மூடப்படும் பாடசாலைகள்

Freelancer   / 2023 ஒக்டோபர் 23 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாணத்தில் நேற்று (22) இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி  தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, அக்குரஸ்ஸ, தெனியா, முலட்டியான மற்றும் வலஸ்முல்ல ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளை மாத்திரம் மூடுவதற்கு பிராந்திய கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய அவசர நிலை காரணமாக தென் மாகாண கல்விச் செயலாளரின் அனுமதிக்கு உட்பட்டு தெனியா கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று (23) விடுமுறை வழங்கப்பட்டதாக தெனியா பிராந்திய கல்விப் பணிப்பாளர் தம்மிகா பிரியதர்ஷனி தெரிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .