Princiya Dixci / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிக்கடுவை, நாரிகம ரயில் கடவையில் வைத்து முச்சக்கர வண்டி, ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.
மாத்தறையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த ரயிலிலேயே, முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, ஹிக்கடுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஹிக்கடுவை பிரதேச்தைச் சேரந்த 23 வயதுடைய இளைஞனே, இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, ஹிக்கடுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
14 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago