2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தங்காலை கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ரி-56 துப்பாக்கி மீட்பு

Super User   / 2011 டிசெம்பர் 27 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தங்காலையில் ஞாயிறன்று பிரித்தானிய சுற்றுலா பயணியொருவர் கொல்லப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  பயன்படுத்திய ரி-56 ரக துப்பாக்கியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனனர்.

இந்நபர் நத்தாரை கொண்டாடுவதற்காக நள்ளிரவு 12 மணியளவில், வானத்தை நோக்கி சுடுவதற்கு இத்துப்பாக்கியை பயன்படுத்தியதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

மேற்படி சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபரான தங்காலை பிரதேச சபைத் தலைவர் தனது சாரதி சகிதம் நேற்று திங்கட்கிழமை மாலை சரணடைந்தார். அன்று காலை மேலும் இருவர் தங்காலை பொலிஸில் சரணடைந்தனர்.

மேற்படி சம்பவத்தில் காயமடைந்த ரஷ்ய பெண்ணொருவர்  கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு வந்துள்ளார். அவர் கராபிட்டிய வைத்தியசாலையிலிருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். (சுபுன் டயஸ்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X