Super User / 2011 பெப்ரவரி 04 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிருஷான் ஜீவகா ஜயருக்)
சோமாலியா கடற் கொள்ளையரர்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கை மீனவர்கள் நேற்றிரவு விடுவிக்கப்பட்டதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தாம் கடற் கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்டதாக, இந்த மீனவர்கள் வானொலி தொடர்பு மூலம் வியாழன் இரவு அறிவித்தனர் என கப்பறதொட்ட மீன்பிடி சனசமூக நிலைய பொறுப்பதிகாரி அருண ஜயவீர தெரிவித்தார்.
கடந்த மாதம் மிரிஸ பகுதியிலிருந்து மீன் பிடிக்க சென்ற ஐந்து மீனவர்களும் சர்வதேச கடற் பரப்பிலிருந்து மீன் பிடித்து கொண்டிருந்த போது சோமாலிய கடற் கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டனர்.
இவர்களில் இருவர் கடந்த ஜனவரி 27ஆம் திகதி கடற் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வர 15 நாட்களுக்கு மேல் தேவைப்படும் என ஜயவீர மேலும் குறிப்பிட்டார்.
7 minute ago
18 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
28 minute ago
35 minute ago