2025 மே 03, சனிக்கிழமை

வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலி

Super User   / 2012 மே 06 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                  (சுபுன் டயஸ்)

பவுஸர் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர். அஹுங்கல்ல பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உரம் ஏற்றிச் சென்ற லொறியொன்று, பவுஸரை முந்திச் செல்ல முற்பட்டபோது அவ்விரு வாகனங்களுக்கிடையில் மோட்டார் சைக்கிள் சிக்கியது. மோட்டார் சைக்கிளின் பின்னால் லொறி மோதியது. அதன்பின் பவுஸரின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இரு இளைஞர்களும் பலபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் அவர்கள் இறந்துவிட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X