2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

மாணவர்கள் தலைக் கவசம் அணிவதை கட்டாயமாக்க நடவடிக்கை

Kogilavani   / 2012 நவம்பர் 23 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                             (எம்.சீ.சபூர்தீன்)
மோட்டார் வண்டியில் பயணிக்கும் போது பாடசாலை மாணவர்களும் தலைக் கவசம் அணிவதை கட்டாயமாக்க அநுராதபுரம் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெளிவுபடுத்தப்படவுள்ளதாகவும் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அஜித் குணதிலக்க தெரிவித்தார்.

பாடசாலைக்கு வரும் போதும் பாடசாலை விட்டுச் செல்லும் போதும் வீதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. தலைக் கவசம் அணியாது தினமும் ஏராளமான பாடசாலை மாணவர்கள் மோட்டார் வண்டிகளில் பயணிக்கின்றனர். அவர்களின் உயிர்களைக் காக்கும் நோக்கிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் தலைக் கவசம் அணியாத பாடசாலை மாணவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சகல போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .