2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

துப்பாக்கிச் சூடு மூவருக்கு காயம்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 14 , மு.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் திஸ்ஸமாராகம கங்ஹசிறிபுரவிலேயே இடம்பெற்றுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பற்றவைக்கப்பட்ட வாணவேடிக்கை பக்கத்துவீட்டு கூரையின் மீது விழுந்தமையை அடுத்தே இருவீட்டாருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.


  Comments - 0

  • aslam Sunday, 14 April 2013 04:40 PM

    thaeveya idu

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .