2025 மே 03, சனிக்கிழமை

21 ஆவது நூற்றாண்டுக்கு தேவையானதொரு கல்வி முறையை உருவாக்குவது அவசியம்:டலஸ்

Super User   / 2012 ஜூலை 10 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}



'21 ஆவது நூற்றாண்டுக்கு தேவையானதொரு கல்வி முறையை நமது பிள்ளைகளுக்காக உருவாக்குவது அவசியமாகும். நமது நாட்டிலுள்ள தற்போதைய கல்வி முறையில் பிரதானமாக பல்கலைக்கழக கல்வியை மையமாகக்கொண்டு உருவாகியதேயாகும்' என இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

காலி கொக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள 'மார்ட்டின் விக்கிரமசிங்க' பாடசாலைக்காக புதிதாக அமைக்கப்பட்ட 'மெல்பர்ன்' கட்டிடத்தை திறந்துவைக்கும் நிகழ்ச்சியில் பிரதான அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

 வருடம் தோறும் முதலாம் ஆண்டுக்கு சேர்க்கும் மாணவ மாணவிகளில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாவது 4 சதவீதமான மிக சிறிய எண்ணிக்கையானோரே. இந்த 4 சதவீதமானோருக்காக மட்டும் நமது முழு கல்வித்துறை அமைந்திருக்கின்றது. அதனால் இந்த கல்விமுறையானது நமது நாட்டில் எடுத்த ஒரு தவறான முடிவு என்று நிரூபணமாகியுள்ளது' என்றார்.

தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திமா ராசபுத்திர, நாடளுமன்ற பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, அவுஸ்திரேலிய பிரதி உயர் ஸ்தானியர்  நடாலியா சார்ல்ஸ் ஆகியோரும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X