2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

உடைந்த நிலையில் காந்தி சிலை...

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு நகரத்தில் அமைக்கப்பட்டு வரும் காந்தியின் திருவுருவச்சிலை தற்போது உடைந்த நிலையில் காணப்படுகின்றது.

முல்லைத்தீவு நகரத்தில் தற்போது அமைக்கப்பட்டு வரும் பணிகள் முழுமையடையாத உருவச்சிலையே இவ்வாறு உடைந்து சரிந்த நிலையில் காணப்படுகின்றது.

இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரிடம் வினவியபோது, இது தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை எனவும் அதிக காற்றழுத்தம் காரணமாக உடைந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

இந்த சிலை சட்டத்துக்கு புறம்பாக அனுமதியற்ற முறையில் அமைக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், வடமாகாண சபை ஆகியவற்றில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு: சுப்பிரமணியம் பாஸ்கரன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .