2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மௌனத்தைக் கலைப்போம்...

Suganthini Ratnam   / 2017 ஜூன் 01 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, எஸ்.பாக்கியநாதன்,எம்.எம்.அஹமட் அனாம்.

மூதூர், பெரியவெளிக் கிராமத்தில் சிறுமிகள் மூவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, மட்டக்களப்பு நகரில் இன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

'மௌனத்தைக் கலைப்போம், குற்றவாளிகளைக் கைதுசெய்'  எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட முற்போக்கு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது,  மட்டக்களப்பு பஸ் தரிப்பிட முன்றலிலிருந்து ஆரம்பமாகி, காந்தி பூங்காவைச் சென்றடைந்து நிறைவுற்றது.  
 
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து வாழைச்சேனையிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது,


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .