Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(வதனகுமார், றிபாயா நூர்)
சிறைக்கைதிகள் வாரத்தினை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 18 சிறைக்கைதிகள் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலைசெய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக சிறைக்கைதிகள்வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதி நிகழ்வில் சிறுகுற்றங்கள் இழைத்து தண்டப்பணம் செலுத்தமுடியாமல் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 18பேர் அவர்களது தண்டனைக்காலம் முடியும் முன்னரே விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.
சிறைக்கைதிகள் நலன்புரி அமைப்பினால் நடத்தப்பட்ட இந்நிகழ்வின்போது கைதிகளின் உறவினர்களை அழைத்து ஒன்றாக உணவருந்தி கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன் கைதிகளின் பிள்ளைகளுக்கு கல்வியினை ஊக்குவிப்பதற்காக பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டதுடன் கைதிகளின் குடும்பத்தினருக்கு வீட்டு பாவணை பொருட்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் ஒரு பெண் கைதி உட்பட 18 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிகழ்வானது மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சர் சிச்சிறி பண்டார தலைமையில் இடம்பெற்றது. சிறைசாலை நலன்புரி அமைப்பின் அதிகாரி எஸ்.ஸ்ரீனிவாசன், மட்டு. மருத்துவ பீட தலைவர் வைத்தியர் கே.கருணாகரன், மட்டு. பிரதான சிறைச்சாலை உத்தியோகத்தர் பிரபாகரன் உட்பட மதத் தலைவர்கள் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago