2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

நல்லிணக்க ஆணைக்குழு அம்பாறையில்

Super User   / 2011 மார்ச் 25 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்,எம்.சி.அன்சார்)

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.

ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி. சிவ்வாவின் தலைமையில் இடம்பெற்ற இன்றைய அமர்வில் சுமார் முப்பதுக்கு மேற்பட்டோர் சாட்சியமளித்தனர்.

மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர்.

சாட்சியமளித்தோரில் பலர் தமிழ் பெண்களாவர். இவர்கள் காணாமல் போன தமது சொந்தங்கள் தொடர்பில் சாட்சியமளித்ததோடு, அவர்களை கண்டு பிடித்துத் தருமாறும் ஆணைக்குழு முன் அழுது வேண்டினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .