Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 மார்ச் 29 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான தரப்படுத்தலில், ஆர்ஜென்டின அணி முதலிடத்தைப் பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய தரப்படுத்தல்கள், ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் போதே, ஆர்ஜென்டின அணி முதலிடத்தைப் பெற்றுக் கொள்ளும்.
உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகள் இடம்பெற்றுவரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை, சிலி அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில், ஆர்ஜென்டின அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றிருந்தது.
மறுபுறத்தில், கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல், உலகத் தரப்படுத்தலில் முதலிடத்தில் காணப்பட்டுவரும் பெல்ஜியம் அணி, போட்டிகள் எவற்றிலும் அண்மைக்காலமாகப் பங்குபற்றியிருக்கவில்லை. இதன் காரணமாகவே, ஆர்ஜென்டின அணி முதலிடத்தைப் பெற்றுக் கொள்ளவுள்ளது.
தென் அமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளனக் கிண்ணத்துக்கான போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், தென்னமெரிக்க நாடுகள் அனைத்துக்குமே, தரவரிசையில் நல்ல வாய்ப்புகள் காணப்படுகின்றன. சாதாரண சிநேகபூர்வப் போட்டிகளை விட, அத்தொடரின் போட்டிகளுக்கு அதிக புள்ளிகள் வழங்கப்படுகின்றமையே அதற்கான காரணமாகும்.
உலகச் சம்பியன்களான ஜேர்மனி, அண்மைக்காலமாகச் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தாமை காரணமாக, 6ஆவது இடத்துக்குத் தள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, இங்கிலாந்து அணி, 10ஆவது இடத்துக்கு வெளியே அனுப்பப்படும் ஆபத்தையும் எதிர்கொண்டுள்ளது.
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தரவரிசை, ஏப்ரல் 7ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .