2021 ஜூன் 24, வியாழக்கிழமை

இந்தியன் பிரீமியர் லீக் 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் 22 ஓட்டங்களால் வெற்றி

Super User   / 2010 ஏப்ரல் 26 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிரீமியர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் 22 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த கிரிக்கெட் போட்டி மும்பையிலுள்ள பாட்டீல் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் விளையாடின.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். இந்த நிலையில், களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .