2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

கார்த்திக் அதிரடி: சம்பியனானது இந்தியா

Gopikrishna Kanagalingam   / 2018 மார்ச் 18 , பி.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி கைகொடுக்க இந்தியா சம்பியனானது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பங்களாதேஷ், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், சபீர் ரஹ்மான் 77 (50) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், யுஸ்வேந்திர சஹால் 3, ஜெய்டேவ் உனத்கட் 2, வொஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 167 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, இறுதிப் பந்தில் வெற்றிக்கு ஐந்து ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்த நிலையில், தினேஷ் கார்த்திக் பெற்ற ஆறு ஓட்டங்கள் காரணமாக 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. துடுப்பாட்டத்தில், ரோகித் ஷர்மா 56 (42), தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 29 (08), மனீஷ் பாண்டே 28 (27), லோகேஷ் ராகுல் 24 (14) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ருபெல் ஹொஸைன் 2, முஸ்தபிசூர் ரஹ்மான், ஷகிப் அல் ஹஸன், நஸ்முல் இஸ்லாம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக தினேஷ் கார்த்திக்கும் தொடரின் நாயகனாக வொஷிங்டன் சுந்தரும் தெரிவானார்கள்.  (படங்கள்: குஷான் பத்திராஜ)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .