2025 ஜூலை 02, புதன்கிழமை

காயமடைந்த வைஸுக்கு பதிலாக அல்பி மோர்க்கல்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கை முறிந்தமை காரணமாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாபிரிக்க சர்வதேச இருபது-20 போட்டிக் குழாமிலிருந்து சகலதுறை வீரர் டேவிட் வைஸ் விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக இன்னுமொரு சகலதுறை ஆட்டக்காரர் அல்பி மோர்க்கல் குழாமில் இடம்பெற்றுள்ளார். இதனையடுத்து 18 மாதங்களுக்கு பிறகு தென்னாபிரிக்க சர்வதேச இருபது-20 அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பருவகாலத்துக்கு முன்னரான பயிற்சி ஆட்டமொன்றில் தனது பந்துவீச்சில் பிடியெடுப்பொன்றை மேற்கொள்ள முயற்சித்த போதே வலது கையில் வைஸ் காயத்துக்கு உள்ளாகியுள்ளார். இதற்கு சத்திரசிகிச்சை தேவைப்படுவதுடன், அவர் ஆறு வாரங்களலவில் போட்டிகள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை காலில் என்பு பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதையிலிருந்து குணமடைந்து வரும் துடுப்பாட்ட வீரர் ரீலி ரொஸோ ஒருநாள் குழாமிலிருந்து விலகியுள்ளதுடன், இவருக்கு பதிலாக இருபது-20 குழாமில் முதன்முறையாக இடம்பெற்ற காயா சொண்டோ குழாமில் இடம்பெற்றுள்ளார்.

தவிர அண்மையில் காயமடைந்திருந்த துடுப்பாட்ட வீரர் பவ் டுபிலிசிஸ், வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மொரிஸ் ஆகியோர் காயத்திலிருந்து முற்றாக குணமடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .