Shanmugan Murugavel / 2015 நவம்பர் 19 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, மழை காரணமாக ஒரு நாள் மாத்திரமே இடம்பெறக் கூடியதாக அமைந்தமை, எரிச்சலை ஏற்படுத்தியதாக, இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் விராத் கோலி தெரிவித்தார்.
முதல் நாள் மாத்திரமே போட்டி இடம்பெற்றமை எரிச்சலைத் தந்ததாகத் தெரிவித்த அவர், குறிப்பாக, முதலாவது நாளில், 214 ஓட்டங்களுக்கு தென்னாபிரிக்காவை ஆட்டமிழக்கச் செய்து, பின்னர் விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களைப் பெற்றுப் பலமான நிலையில் காணப்பட்டதால், இரண்டாம், மூன்றாம் நாட்கள், மிகவும் கடினமாகக் கழிந்ததாக அவர் தெரிவித்தார்.
எனினும், நான்காவதும் ஐந்தாவதும் நாள் இடம்பெற்றிருந்தால், போட்டியில் வெற்றிபெற முடியுமென்ற நம்பிக்கை, அணியிடம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஒரு நாள் முழுவதுமாகத் தாங்கள் துடுப்பெடுத்தாடிய பின்னர், எதிரணியை அழுத்தத்துக்குள்ளாக்கியிருக்க முடியமென அவர் தெரிவித்தார்.
இப்போட்டி, வெற்றி தோல்வியற்று முடிவடைந்த போதிலும், தமது அணியின் நேர்முகமான எண்ணங்களை மாற்ற முடியாது எனத் தெரிவித்த அவர், முதலாவது போட்டியில் காணப்பட்ட அதே உற்சாகத்துடன் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
இரு அணிகளுக்குமிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் புதன்கிழமை (25) ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
18 minute ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
5 hours ago
7 hours ago